Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக செயல்படும் புதிய தடுப்பூசி…. மத்திய அரசு அனுமதி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு தடுப்பூசியை செலுத்துவோருக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவோர் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்ததடுப்பூசி குறித்த சோதனையில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இரண்டு தவணை கோவாக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய 18 வயதுநிரம்பியவர்கள் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |