தோனியால் என் கிரிக்கெட் கரியரே மாறி நான் ஒரு மிக சிறப்பான வீரராக மாறி இருக்கிறேன் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக ஆடிவரும் தீபக் சாஹர் 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். இதுவரை மொத்தம் 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தீபக் சாஹர்.. தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்தை ஸ்விங் செய்யக்கூடிய இவர் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை படைத்ததாக இருக்கிறார்.கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான தீபக் சாஹர் அதே ஆண்டிலேயே இந்திய அணிக்காக அறிமுகமாகி டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் ஆடும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி தனக்கு ஆதரவு அளித்தது குறித்து பேசி உள்ளார் தீபக் சாஹர்.. இது குறித்து அவர்பேசுகையில், எனக்கு தோனி நிறைய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார் அவர் சொன்னதிலேயே சிறந்த அட்வைஸ் என்னவென்றால், விளையாடும் போது முதலில் நீ உன்னை நம்ப வேண்டும். அப்போதுதான் உன்னிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்.
அவர் சொன்னபடியே என் மீது நான் நம்பிக்கை வைத்து ஆடும் போது அது எனக்கு ஆட்டத்தில் பிரதிபலித்தது. வீரர்களை அவர்கள் இஷ்டத்துக்கு சுதந்திரமாக ஆடவிட்டு அவர்களுக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை சரியாக புரிந்து கொள்பவர் தோனி.
ஒரு வீரர் உடைய திறன் என்ன என்பதை புரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து அவர்களின் பெஸ்ட்டை பெறுவார். இதனால்தான் நான் அவரை நம்பர் ஒன் கேப்டன் என்பேன். ஒரே ஒருமுறை தோனி உங்கள் மீது நம்பிக்கை வைத்து விட்டார் என்றால் நிச்சயம் உங்களிடம் நல்ல திறன் இருக்கிறது என்று அர்த்தம். அதன்பின் நம்மை நாமே நம்மினாலே போதும், அது நிச்சயம் நமக்கு சாதகமாக அமையும்.
சிஎஸ்கே அணிக்காக நான் தொடக்கத்தில் இருந்து விளையாடும்போது தோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்தார் அது மட்டும் இல்லாமல் அவர் கொடுத்த ஆலோசனையின் படி தான் செயல்படுவதன் காரணமாகவே தற்போது எனது கிரிக்கெட் கரியரே மாறி நான் ஒரு மிக சிறப்பான வீரராக மாறி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது ஆல்ரவுண்டராக வேண்டும் என்று தான் நினைத்தேன்.. அதிலும் முக்கியமாக பேட்டிங் ஆல்ரவுண்டராக விளையாடுவது எனது விருப்பம்.. ஆனால் நாளடைவில் நான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மாற முடிவெடுத்தேன் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.