லாரி டயர் வெடித்ததில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிரானைட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வேலூரில் உள்ள அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் லாரி அப்பளம் போல் நொறுங்கியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த டிரைவர், கிளீனர் ஆகிய இருவரையும் உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் காவல்துறையினர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.