இந்த வீரர்கள் தங்களின் செயல்பாட்டை நிரூபித்தால் மட்டுமே உலககோப்பையில் இடம்பிடிப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் களம் காண்கிறது.. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால் டி20 கோப்பையை கைப்பற்ற உதவிகரமாக இருக்கும்.. இந்த முறை ஆசிய கோப்பை தொடர் 20 ஓவர் போட்டியளாக நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் தலைமையிலான அணியில் 15 பேர் இடம்பெற்றுள்ளனர். கேஎல் ராகுல் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார்..
இது மட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார் உள்ளிட்ட சமீபத்திய தொடர்பில் அசத்தி வருபவர்களும், அனுபவமும் இளமை கலந்த வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.. டி20 உலக கோப்பையில் விளையாட போகும் உத்தேச வீரர்களை 2022 ஐபிஎல் தொடருக்கு பின்னர் நடைபெற்று வரும் தொடர்களில் இருந்து இந்திய அணி யாரைத் தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை இருந்து வருகிறது.
இருப்பினும் இந்த ஆசிய தொடர் தான் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் வீரர்களுக்கும் முக்கியம். ஏனென்றால் இந்த ஆசிய தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்கள் உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் தங்களின் செயல்பாட்டை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள 5 வீரர்களை பார்ப்போம் :
ஆவேஷ் கான் :
இவர் சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அசத்தியதாலும், இளம் வீரராகவும் இருப்பதனால் முகமது சமித்து பதிலாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. எனவே இந்த ஆசிய கோப்பையில் நிச்சயம் இவர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே டி20 உலக கோப்பையில் பேக்கப் வீரராக விளையாடும் வாய்ப்பை இவர் பெறுவார்..
ஏன் என்று சொன்னால் காயம் காரணமாக இடம்பெறாமல் உள்ள பும்ரா, அக்ஷர் பட்டேல் அணிக்கு திரும்பும் நேரத்தில், ஏற்கனவே அணியில் சிறப்பாக விளையாடி இடம் பிடித்திருக்கும் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் இருப்பதால் இவருக்கு இடம் கிடைக்காது. ஒருவேளை இவர் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட தவறிவிட்டால் டி20 உலக கோப்பை மட்டுமின்றி அதன் பின்வரும் தொடர்பிலும் தேர்வு செய்யப்படாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது.
ரவி பிஷ்னாய் :
சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் ஆல்ரவுண்டராக சிறப்பாக அசத்திய அக்சர் பட்டேல் ஆசிய கோப்பையில் இடம்பெறவில்லை.. இது நிறைய கேள்விகளை அனைவரது மத்தியிலும் எழுப்பி உள்ளது.. ஆனாலும் அறிமுகமான முதல் வாய்ப்பு பெற்ற அத்தனை போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இந்த ஆசிய தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.. எனவே இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது..
ஏனென்றால் இதில் சுமாராக செயல்பட்டால் கணிசமாக பேட்டிங்கில் அசத்தி வரும் அக்சர் பட்டேலுக்கு உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும்.. இதுபோக சிறந்த ஆல்ரவுண்டர்களான அஸ்வின், ஜடேஜாவும் போட்டியாக இருக்கின்றனர் என்பதை இவர் மறந்து விடக்கூடாது.
ரவிச்சந்திரன் அஸ்வின் :
2017 க்கு பின் இந்திய அணியில் இருந்து மொத்தமாக களத்திவிடப்பட்ட காரணத்தால் வெள்ளை பந்து கிரிக்கெட் கேரியர் அவ்வளவுதான் முடிந்து விட்டது என்று நினைத்த தருணத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 2021 டி20 உலக கோப்பையில் நேரடியாக 4 ஆண்டுகளுக்கு பின் தேர்வாகி ரீ என்ட்ரி கொடுத்தார்.. அப்போதிலிருந்து இப்போது வரை ரன்களை வாரி வழங்காமல் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி வருகிறார்.. ஆனாலும் விக்கெட் தேவைப்படும்போது கேப்டனுக்கு இவர் விக்கெட் எடுக்கும் பலராக இல்லை என்பதே ஒரு குறையாக இருக்கிறது.
ஆனாலும் முன்பை விட பேட்டிங்கில் நிறை மாற்றங்களை செய்து இருக்கிறார்.. இருப்பினும் இவருக்கு போட்டியாக ஜடேஜா, சஹல் ஆகியோர் இருப்பதன் காரணமாக ஆசிய கோப்பையில் சுழல் பந்துவீச்சில் அசத்தி நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றினால் நிச்சயமாக இவருக்கு உலககோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தீபக் ஹூடா :
கடந்த பிப்ரவரியில் அறிமுகமான இவர் கடந்த 2022 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இடம் பிடித்து சிறப்பாக ஆடினார்.. அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்த அயர்லாந்து தொடரிலும் சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் தொடரும் கிடைத்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தி செயல்பட்டு வருகிறார்.. அதுமட்டுமின்றி சஹல் போன்ற முதன்மை சுழல் பந்துவீச்சாளருக்கு இணையாக பந்து வீசும் திறமையும் இவர் பெற்றதன் காரணமாகவே இந்த ஆசிய கோப்பையில் இடம் பிடித்துள்ளார்..
ஆனாலும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் இருப்பதால் பெஞ்சில் அமர போகும் வாய்ப்பு ஒருவேளை இவருக்கு கிடைக்கும் பட்சத்தில், அதை இவர் சரியாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும்.. அப்போதுதான் விராட் கோலி இருந்தாலும் கூட டி20 உலக கோப்பையில் இவர் பேக்கப் வீரராக தேர்வாவார்.. யாரேனும் காயம் அடையும் பட்சத்தில் அணில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்..
தினேஷ் கார்த்திக் :
ஒரு கட்டத்தில் சிறப்பாக ஆடிவந்த தினேஷ் கார்த்திக் இடையில் திடீரென வர்ணனையாளராக மாறியதால் இவரது கதை முடிந்தது அவ்வளவுதான் என்று அனைவராலும் கருதப்பட்ட நிலையில் 2022 டி20 உலக கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்ற இலட்சியத்துடன் கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டு கடந்த ஐபிஎல் தொடரில் 183.33 என்று அதிரடியான ஸ்டைக் ரேட்டில் சிறப்பாக பினிஷிங் செய்து பெங்களூர் அணிக்கு சில வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.. இதனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்துள்ளார்.
இதையடுத்து இந்திய அணிக்கு தேர்வான அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக அசத்தினார். ஆனால் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சுமாராகவே செயல்பட்டுள்ளார், இவர் 37 வயதை கடந்தும் ரிசப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகிய விக்கெட் கீப்பிங் செய்யும் வீரர்கள் இருப்பதால் பினிஷிங் செய்வதற்கான வேலைக்காக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்..
ஆனாலும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறந்த பினிஷர் வேலையை செய்வார்கள் என்பதால் இவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சில கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. எனவே இவர் டி20 உலக கோப்பையில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்றால் கட்டாயமாக இந்த ஆசிய கோப்பையில் அவரது பேட்டால் பதில் சொல்ல வேண்டும்.. அப்படி செய்தால் மட்டுமே இந்த விமர்சனங்களை உடைத்து உலகக் கோப்பை அணியில் அவர் தேர்வாவார்.. தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது..