விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வைத்து நேற்று விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவ வீரர் கங்காதரன், விவசாயி பாலசுப்ரமணியன், ஜெயக்குமார், இளமாறன், நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் விதைகளை ஆய்வு செய்தனர்.
இது குறித்து குடியாத்தம் இயற்கை விவசாயி சிவசங்கரன் கூறியதாவது. விவசாய நிலத்தில் இயற்கையான முறையில் பயிருக்கு தேவையான பொருட்களை வழங்கி அதிக லாபம் பெரும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை அவர் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார்.