Categories
தேசிய செய்திகள்

வீடு தேடி வரும் தேசியக்கொடி…. ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி….? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தேசியக்கொடியை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு epostoffice.gov.in என்ற இணையதளத்தில் புராடக்ட்ஸ் செக்சனில், நேஷனல் ஃபிளாக்-ஐ கிளிக் செய்து, பயனராக பதிவுசெய்தோ (அ) கெஸ்டாகவோ கொடியை ஆர்டர் செய்யலாம். பிறகு மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கட்டணம் செலுத்தினால், தேசியக்கொடி வீடு தேடி வரும்.

Categories

Tech |