Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உலக பழங்குடியினர் தின விழா…. சிறப்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்….. திரளானோர் பங்களிப்பு….!!!

சிறப்பாக நடைபெற்ற பழங்குடியினர் தின விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகே செம்மேட்டில் வல்வில் ஓரி அரங்கு அமைந்துள்ளது. இங்கு உலக பழங்குடியினர் தின விழா மற்றும் கலாச்சார விழா கொண்டாடப் பட்டது. இந்த விழா தமிழ்நாடு செக்யூல்டு ட்ரைவ் பேரவை சார்பில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் வரதராஜு தலைமை தாங்கினார். இந்நிலையில் விழாவின் போது பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரியமான நடனத்தை ஆடினர். இந்த நடனத்தின் பெயர் சேர்வையாட்டம் ஆகும்.

மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எ.ல்ஏ சந்திரசேகரன், செங்காடு சங்க செயலாளர் செந்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராஜ், சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ சிவப்பிரகாசம், கலாவதி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ஈஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் மோகன், கொல்லிமலை சேர்மன் மாதேஸ்வரி அண்ணாதுரை, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தன், மாவட்ட அமைப்பாளர் சரவணன் மற்றும் பழங்குடியின மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |