திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம் பகுதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில்அமைத்துள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை என்பதால் அந்த கோவிலுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் திரளாக வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் வீட்டில் நன்மை உண்டாகவும் , வீட்டில் மாமியார் -மருமகள் சண்டைகள் தீரவும் சிறப்பு பூஜை செய்வதாகவும் இதற்காக நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள தங்கநகையை கொண்டு வரும் படி கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பி அப்பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண் 4 சவரன் தங்க நகையை இளைஞரிடம் மாந்திரீகம் செய்து தரும்படி கொடுத்துள்ளார். சிறிது நேரம் பூஜை செய்வது போல் பாவலா காட்டிய இளைஞர் … அந்த பெண் அசந்த நேரத்தில் தான் வைத்திருந்த பைக்கில் நகையோடு தப்பி ஓடினான். பின்பு தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த அந்த பெண் கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகைகளுடன் தப்பியோடிய இளைஞரை சிசி டிவி உதவியுடன் வலைவீசி தேடி வருகின்றனர்.