மூவர்ண நிறத்தில் உணவுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதால் ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான விழிப்புணர்வு பேரணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் மூவர்ண நிறத்தில் உணவுகள் தயார் செய்யப்பட்ட விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவுகள் பார்ப்பதற்கு தேசியக்கொடி வண்ணத்தில் இருப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் உணவகத்தை நடத்தி வரும் நபர் முன்னாள் ராணுவ வீரர் என்றும் கூறப்படுகிறது.