Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கனமழையின் காரணமாக கடற்கரையில் ஒதுங்கும் மீன்கள்….. மகிழ்ச்சியாக பிடித்து செல்லும் பொதுமக்கள்….!!!

கடற்கரையில் ஒதுங்கும் மீன்களை ஏராளமானோர் மகிழ்ச்சியாக பிடித்து செல்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கடற்கரை ஓங்களில் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்குகிறது. இதில் குறிப்பாக வெளமீன்கள் அதிக அளவில் ஒதுங்குகிறது. இந்த மீன்களை பிடிப்பதற்காக ஏராளமான பெண்கள் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பலர் கடற்கரையில் குவிந்துள்ளனர்.

இந்த மீன்களை இளைஞர்கள் தங்கள் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதோடு, நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதாக கூறியுள்ளனர். கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி வந்த போது கடற்கரையில் ஏராளமான மீன்கள் கரை ஒதுக்கியது. இந்த மீன்களை பிடிப்பதற்காக சென்ற பொதுமக்கள் கொத்து கொத்தாக கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் சமூக ஆர்வலர்கள் கடற்கரையில் மீன் பிடிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடற்கரையில் ஒதுங்கும் வெள மீன்களை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |