அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பில் இன்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முக்கியமான ஒரு கோரிக்கை என்பது முன் வைக்கப்பட்டது. அதாவது அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அந்த மனு மீதான விசாரணை உடனடியாக எடுத்து விசாரிக்க வேண்டும் என முக்கியமான கோரிக்கையை அவர் வலியுறுத்துள்ளார்.
இதற்கு தலைமை நீதிபதி 19ஆம் தேதிக்கு முன்பாக வழக்கை நாங்கள் விசாரணைக்கு பட்டியலிட முயற்சிக்கிறோம் என்ற உறுதியை கொடுத்திருக்கிறார். அதாவது அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்பதை நாம் நம்பலாம். சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக வேறு வேறு வழக்குகள் நடந்துவரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு சாவி தொடர்பான இந்த வழக்கை பெரிய அளவில் நம்புகிறார்கள்.. அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்போது அவர்கள் தரப்பு காண சாதகமாக தீர்ப்பினை எதிர்பார்ப்பார்கள்..