கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானத்திற்கு வந்த உறவினரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் இடையார் பாலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி. கணவன் மனைவியிடையே இருந்து வந்த குடும்ப பிரச்சினையின் காரணமாக சகோதரியின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார் தனலட்சுமி.மனைவியின் சகோதரி இல்லத்திற்கு சென்ற ராஜேந்திரன் மனைவி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்க்கு மறுப்பு தெரிவித்த தனலட்சுமியிடம் ராஜேந்திரன் தகராறு செய்துள்ளார். தகராறில் தனலட்சுமியின் சகோதரியின் கணவன் சௌந்தர்ராஜன் இடையில் வரவே கோபம்கொண்ட ராஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
குத்துபட்டு ரத்தவெள்ளத்தில் கடந்த சௌந்தர்ராஜனை பார்த்த உறவினர்கள் உடனடியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் உறவினர்கள். புகாரின் அடிப்படையில் போலீஸார் தலைமறைவான ராஜேந்திரனை உடனடியாக கைது செய்து மத்திய சிறையினில் அடைத்துள்ளனர்.