மேல்நிலைப் பள்ளியில் 1996ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூரில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் கௌடி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர் இளைய பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் 1996ஆம் ஆண்டு படித்த திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி தங்களது பள்ளி அனுபவம், கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். பின்னர், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நினைவாக பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.