Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் கோவிலுக்கு எதிரானவன் இல்லை”… சர்ச்சைக்கு சூரி விளக்கம்…!!!!!

சூரி பேச்சுக்கு பல எதிர்ப்பு எழுந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது விருமன் திரைப்படத்தில் முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளார். சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படமானது குடும்ப திரைப்பட கதையாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் படக்குழுவினர் மதுரை, மலேசியா என பட பிரமோஷனில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் மதுரையில் சென்ற வாரம் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சூரி பங்கேற்று அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது அவர் ஆயிரம் கோவில்களை கட்டுவதை விட அன்னச்சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது எனக் கூறினார்.

இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது. மேலும் சூரிமன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் விருமன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்ற பொழுது சூரி மதுரையில் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, தான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டு தான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மனை மிகவும் பிடிக்கும். நான் வைத்திருக்கும் ஹோட்டல்களுக்கும் அம்மன் என்று தான் பெயர் வைத்திருக்கிறேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. நான் படிக்காதவன் என்பதால் அதன் முக்கியத்துவம் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

Categories

Tech |