Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவன் தற்கொலை…. காரணம் தேடி காவல் துறையினர்

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூரை  சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் செந்தில்குமார். தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த செந்தில் குமார், நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே போனவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் ஒரு மரத்தில் பிணமாக தொங்கி உள்ளார் செந்தில்குமார். இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து வந்து செந்தில் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |