Categories
தேசிய செய்திகள்

இன்னும் ஒரு நாள் மட்டும் தான் இருக்கு…. 35% தள்ளுபடியில் பிரிட்ஜ்….. அமேசான் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் Amazon great freedom festival sale என்ற சலுகையை அறிவித்துள்ளது.இந்த சலுகையின் கீழ் பொதுமக்கள் பல்வேறு வகையான பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்மார்ட் போன், லேப்டாப்,கிச்சன் பொருட்கள் மற்றும் துணி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சலுகை ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மட்டுமே.

அதற்குள் வாங்கினால் உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும்.சலுகை முடிவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக பிரிட்ஜ் வாங்க நினைப்பவர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது இரண்டு கதவு கொண்ட பிரிட்ஜுகளுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. 18 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு விலைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

நான்கு கதவுகள் அல்லது பல அடுக்குகள் கொண்ட பிரிட்ஜ் வாங்குவதாக இருந்தால் உங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் . சாதாரண பிரிட்ஜ் வாங்குவதற்கு 35 சதவீதம் வரை தள்ளுபடி. அமேசான் நிறுவனம் பிரிட்ஜ்க்கு மட்டுமே நிறைய சலுகைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலமாக வாங்கினால் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி.மேலும் ப்ரீபெய்டு முறையில் பிரிட்ஜ் வாங்கினால் 25 ஆயிரம் மதிப்பு 500 ரூபாய் வரையில் சிறப்பு தள்ளுபடி. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பிரிட்ஜ் வாங்கினால் 3500 தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |