அமெரிக்க நாட்டில் கோடீஸ்வரரான பிரபல நடிகர் சாம் கனோன் இதய நோயால் திடீரென்று மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த சாம் என்னும் பிரபல நடிகர் உள்நாட்டு பயணத்தின் போது திடீரென்று உயிரிழந்தார். இவருக்கு ஏறக்குறைய ரூ. 72,09,71,800.00 சொத்து மதிப்பு இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. இவரின் மரணம் பற்றி தாயார் ஏஞ்சலா தெரிவித்ததாவது, என் மகன் திடீரென்று உயிரிழந்ததால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறேன்.
பிறவியிலேயே அவருக்கு இதய நோய் பாதிப்பு இருந்தது. எனினும், சமீப நாட்களாக அது, அதிக வலியை தந்தது. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தன் வாழ்க்கையை நன்றாக அனுபவித்து கொண்டிருக்கும் 31 வயதே ஆகும் இளைஞர் ஒருவரின் வாழ்க்கை திடீரென்று முடிவடைவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று தெரிவித்திருக்கிறார்.