தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பேய் படமான பிசாசு வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இந்த படத்தை மிஸ்கினே இயக்கி உள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி கௌர வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது பிசாசு 2 திரைப்படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் 15 நிமிட நிர்வாண காட்சியால் குழந்தைகள் படத்தை பார்க்க முடியாததால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் மிஸ்கின் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.