அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து வெங்கட் பிரபு கதை ஒன்றை உருவாக்குவதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. தற்போது கதை உருவாக்க முடிந்து அந்த கதையை மெருகேற்றும் வேலை மும்முரமாக நடந்து வருகிறதாம். தற்போது நடிகர் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஏகே61 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் ஏகே62 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதேபோல் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இந்நிலையில் வெங்கட் பிரபு அந்த கதையை அஜித்திடம் சொல்ல அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். விஜய்க்கு இப்படி ஒரு ஐடியாவை வெங்கட் பிரபு கூறிவிட்டாராம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.