Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“புறம்போக்கு இடத்தில் குடிசை அமைக்க வந்த பொதுமக்கள்”….. பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்…. பெரும் பரபரப்பு….!!!!!!!

பெரிய கொடிவேரி கிராமம் சென்றாயன் பாளையம் மலை மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய் துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பெரிய கொடிவேரி கிராமத்தைச் சேர்ந்த நிலம் இல்லாத 58 பேருக்கு வருவாய் துறை சார்பில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் கே என் பாளையம் நாசாபுரம் நாலிட்டேரி பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏற்கனவே பொது மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் குடிசை அமைக்க வந்ததாக தெரிகின்றது.

மேலும் இது பற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது பொது மக்களிடம் அதிகாரிகள் பேசும்போது வருவாய் துறையில் முறையாக விண்ணப்பம் அளிக்காததால் தகுதியுள்ள நபர்களுக்கு பட்டா வழங்கப்படும். ஏற்கனவே பட்டா வழங்கிய நிலையில் ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |