Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி…. பட்டப்பகலில் பரபரப்பு ….!!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 14 வயது மாணவி தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறிஇருக்கிறார். அந்த ஆட்டோவில் முன்பே 25 வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் டோல்கேட்டிலிருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்தனர். இதையடுத்து புது வண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கிய போது மாணவியிடம் அந்த வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் மாணவியின் மூக்கு, தாடை மற்றும் 2 கைகளிலும் காயங்கள் ஏற்பட்டது. அதன்பின் ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் தப்பிஓடினர். உடனே ஆட்டோ டிரைவர் மாணவியை மீட்டு அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவல்துறையினர் எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் (49) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதாவது அந்த வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் மாணவி ஆட்டோவில் இருந்து குதித்தாரா? (அல்லது) மாணவியை கடத்த முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

Categories

Tech |