Categories
உலக செய்திகள்

எங்கள் சுதந்திரத்தை காப்போம்… யாருக்கும் அஞ்சவில்லை… -தைவான் வெளியுறவுத்துறை மந்திரி…!!!

தைவான் மற்றும் சீன நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சீன அரசு, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டிருக்கிறது. எனவே இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனையில் அமெரிக்கா, தைவான் நாட்டிற்கு ஆதரவாக உள்ளது.

இந்நிலையில் தைவான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜோசப் வூ தெரிவித்திருப்பதாவது, எங்கள் நாட்டிற்கு யாரை வரவேற்க வேண்டும் என்பதை சீனா தீர்மானிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

மேலும், தைவான் நாட்டை சீனா பல வருடங்களாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சமீப வருடங்களில் அது அதிகரித்தது. எனவே, தைவான் தங்களின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை காக்க உறுதியாக நிற்கும்.

எங்கள் நாட்டை எதிர்த்து சீனா கட்டாயமாக போர் தொடுக்கும். எங்களை அச்சுறுத்த முயல்கிறார்கள். நாங்கள் அஞ்சவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறோம். எங்களின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |