Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி”…. குஷியில் ரசிகாஸ்…!!!!!

ஏகே 61 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள் தற்பொழுது படத்தின் அப்டேட்டை கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். இந்த நிலையில் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வருகின்ற ஆகஸ்ட் 13ஆம் தேதி இத்திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாக இருக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |