தமிழகத்தில் அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லா ஆசிரியர்கள் விருது வழங்கப்படுகிறது. இந்த வருடம் தேசிய ஆசிரியர் விருதுக்கு மத்திய கல்வி துறை சார்பாக ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு விட்டன.மாநில விருதுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நேற்று தான் விண்ணப்ப பதிவை தொடங்கியது.
இதற்கு வருகின்ற 14ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன .அதாவது அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்கள் பெயர் விருது பெறுவோருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறாது .வணிக ரீதியாக கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் விருது பெற தகுதியற்றவர்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.