Categories
தேசிய செய்திகள்

ரெப்போ விகிதம் மேலும் 6% உயர வாய்ப்பு….? அதிர்ச்சி தகவல்….!!!!!

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுப்பது வழக்கம். அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி ‘ரெப்போ வட்டி’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக உயர்த்தியது.

இதனை தொடர்ந்து ஜுன் 8-ஆம் தேதி மீண்டும் கூடிய இந்தக்குழு, ரெப்போ வட்டியை மேலும் 0.50 சதவிகிதம் உயர்த்தியது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவிகிதமாக இருந்து வந்தது. இதனிடையே தற்போது, ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.5 சதவிகிதம்  உயர்த்தப்பட்ள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும்போது இனி கூடுதலாக வட்டி செலுத்த நேரிடும். இந்நிலையில் செப்டம்பர் அல்லது டிசம்பரில் மேலும் ரெப்போ விதம் 6 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Categories

Tech |