தமிழகத்தில் ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் டெங்குவும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொது சுகாதார துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதார முகாம்களை நடத்தும் படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்காத வகையில் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது