செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை கார்ப்பரேசனின் உங்களுக்கு தெரியும். போன தடவை கடந்த அரசாங்கம் ஒவ்வொரு முறை சட்டமன்றத்தில் வெளியே சொன்னார்கள்.. சென்னை முழுவதும் முடித்து விடுவோம் என்று…. இன்னும் ஏழு டிவிஷனில் செய்யாமல் இருக்கிறோம். ஏற்கனவே ஒரு ஐந்து டிவிஷனில் வேலை நடந்து கொண்டிருக்கிறது, அந்த பணிகள் முடிந்த பிறகு 7 டிவிஷனுக்கு டெண்டர் விடக்கூடிய நிலைமைக்கு வந்துள்ளோம்.
முதலில் சென்னை முழுவதும் முடிக்க வேண்டும், பிறகு கடலோர மாவட்டங்களில் அந்த பணிகளை தொடங்குவதற்கான ஆயத்தங்கள், ஆரம்ப கட்ட பணிகள். மழையால் எங்கெங்கு பாதிப்பு உள்ளது ? கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் கூட… கடந்த வருடம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் நாம் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன ? மீதமுள்ள பணிகள் என்ன ? அதற்கான மதிப்பீடுகள் என்ன ? என்பதை நாங்கள் தயார் செய்து, அந்த பணிகளும் விரைந்து முடிக்க உள்ளோம். கடந்த ஆண்டு நாங்கள் திட்டமிட்டது என்னவென்றால்….
சென்னை உட்பட மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் வரக்கூடிய ஆண்டுகளில் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின்வினியோகம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் இலக்கு, அதைத்தான் மாண்புமிகு முதலமைச்சர் உடைய உத்தரவு. அந்த அடிப்படையில் தான் பணிகள் விரைவாக போர்கள அடிப்படையில் முடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நம்மிடம் மூன்றரை கோடி மின் இணைப்புகள் இருக்கிறது. அதில் நிர்வாகத்தின் ஆய்வுக்கூட்டங்களில்… மாண்புமிகு முதலமைச்சர் உடைய ஆய்வுக் கூட்டங்களில் பார்க்கும்போது…. 1 கோடியே 15 லட்சம் தரவுகள் தான் நம்மிடம் உள்ளது. மற்றவர்களுக்கான தொலைபேசி எண்களோ, மற்ற தகவல்கள் எதுவும் இல்லாமல் இருந்தது.
இப்போது ஏறத்தாழ 100% நிறைவு செய்யக்கூடிய அளவிற்கு அனைத்து வகையான தரவுகளும் பெறப்பட்டு மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. மீதம் இருக்கின்ற இடங்களில்… அடுத்தடுத்து 14 மாசம் ஆகிவிட்டது. சிறிது காலம் கொரோனாவில் போய்விட்டது, சிறிது காலம்மழையில் போய்விட்டது, அடுத்த அடுத்த கட்டம் நிதி ஆதாரங்கள் வட்டி செலுத்தக்கூடிய சூழல்கள் இருக்கக்கூடிய நிதிகளை கொண்டு எது முக்கியமானது, எதை முன்னால் எடுத்துக் கொள்ள வேண்டும். இது எல்லாம் சீர்தூக்கி பார்த்து தான் பணிகள் எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.