இரண்டாம் உலகப் போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அதன் தாக்கம் உரைப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இத்தாலியில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அதனை பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இத்தாலியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால். அங்குள்ள “போ” ஆறு 70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு உள்ளது.
இதனால் போர்கா, வெர்ஜிலியோ பகுதியில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தபட்ட ஆயிரம் பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு இருப்பதை கடந்த மாத 25 ஆம் தேதி மீனவர் ஒருவர் கண்டுபிடித்தார். இதனையடுத்து வெடிக்குண்டை மீட்ட அந்நாட்டு ராணுவம் பெட்ரோல் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்க வைத்து அகற்றினர். மேலும் இரண்டாம் உலகப் போர் முடிந்து நீண்ட காலம் கடந்தும் ஒவ்வொரு நாடுகளில் வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டு வருக்கிறது.