தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மட்டும் இல்லை, மாணவர்களின் நன்மையை கருதியும் பொறியியல் கலந்தாய்வு நீட்டித்திருக்கிறோம்.
பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, கலந்தாய்வு சமூக நீதியின் அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சரியான முறையில் கலந்தாய்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்தார் .