Categories
உலக செய்திகள்

பெல்ஜியத்தில் பயங்கரம்… தன் துணையை கொடூரமாக தாக்கி கொன்ற ஓரினச்சேர்க்கையாளர்….!!!

பெல்ஜியத்தில் வசிக்கும் ஓரினச்சேர்க்கையாளரான ஜெர்மன் நாட்டை சேர்ந்த தூதர் தன் துணைவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியத்தில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தூதரான உவே ஹெர்பர்ட் ஹான், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் துணைவரான வால்டர் ஹென்றி மாக்சிமிலியன் பயோட் மர்மமாக உயிரிழந்ததாக காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அவர், தன் துணைவர் மது அருந்திவிட்டு மயங்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறியிருக்கிறார்.

எனினும் உயிரிழந்தவரின் உடல், மற்றும் வீட்டை ஆய்வு செய்வதில் அவர் கடுமையாக தாக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் தடவியல் அறிக்கையிலும் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவரின் உடலில் பல காயங்கள் கண்டறியப்பட்டது.

அவரின் உடல் பலமாக தாக்கப்பட்டதற்கான பல காயங்களை உள்ளடக்கியிருந்தது. இவர்கள் இருவரும் இருபது ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்திருக்கிறார்கள். வால்டர் ஹென்றி மாக்சிமிலியன் பயோட், மது அருந்தியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிவித்தது முற்றிலும் முரணாக இருந்தது.

மேலும், உவே ஹெர்பர்ட் ஹான் தெரிவித்த எந்த கருத்துக்களும் உண்மை இல்லை என்று தெரியவந்தது. எனவே சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை என்று அவர் கைதாகியிருக்கிறார்.

Categories

Tech |