நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169 ஆவது திரைப்படம் ஜெய்லர். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றுள்ளார்.
அப்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிற்கான சில பணிகளை ரஜினியை நேரில் பார்வையிட இருக்கின்றார் எனவும் சில நாட்கள் அங்கே தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் 12ஆம் தேதி அல்லது 22 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.