Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. பெரம்பலூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர் பகுதியில் ராகுல்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்டுச்சேரி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் ராகுலின் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |