இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இனாம் அகரம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு மதியழகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதியழகி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து குடும்ப பிரச்சனை காரணமாக மதியழகி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.