Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அமைச்சரின் கார் செல்வதற்காக…. நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்…. கும்பகோணத்தில் நடந்தது என்ன?….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.தஞ்சையில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது நோயாளியுடன் மருத்துவமனைக்குச் சென்ற ஆம்புலன்ஸை நீண்ட நேரமாக சாலையில் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி,ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர்.

அப்போது கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்ய அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களின் 25 கார்கள் அனுபவித்து வந்தன. அப்போது பாலத்தின் மறுபக்கத்தில் அமைச்சர் கார் செல்லும் வரை போலீசாரால் ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் சென்ற பிறகு நீண்ட நேரம் காத்திருந்த ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுவாக ஆம்புலன்ஸில் நோயாளி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவசரமாக சைரன் ஒலித்தால் உடனே ஆம்புலன்ஸ்க்கு வழி விட என்பதுதான் விதிமுறை. ஆனால் அமைச்சரின் கார் செல்வதற்காக ஆம்புலன்ஸை நீண்ட வரிசையில் நிறுத்தியது பெரும் கண்டனத்திற்கு உரியது என்றும் இதற்கு பெயர் தான் திராவிட மடல் ஆட்சியா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அமைச்சர் வாகனம் வரும் வரை ஆம்புலன்ஸ் காக்க வைக்கப்பட்டதில் அதிகாரிகளின் தலையீடே காரணமாக இருக்கும் என்றும் இந்த விஷயம் அமைச்சருக்கு தெரியாமல் தான் நடந்திருக்கும் என்றும், தேவையின்றி அவரை சர்ச்சையில் சிக்க வைக்க பார்க்கின்றனர் என்று திமுக உடன்பிறப்புகள் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |