Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது புது டீம்….. “பயமில்லாம ஆடுறாங்க”…. வெற்றிக்குப்பின் கேப்டன் ஹர்திக் பேசியது என்ன?

இந்த புதிய அணி பயமில்லாமல் ஆடி வருவதை நான் பார்த்து வருகிறேன் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்து வந்த டி20 கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்திய அணி நடந்து முடிந்த 4 டி20 போட்டியில்  3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா  தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 188 ரன்கள் குவித்தது. அதன்பின் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15 .4 ஓவரில் 100 ரன்களுக்கு அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது, இந்திய அணியை தலைமையேற்று வழி நடத்துவது என்பது ஒரு சிறந்த உணர்வு. எனது தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே இந்த தொடரை வென்று கொடுத்து விட்டு சென்று விட்டார் எனவே அதன்பின் எனக்கு கேப்டன் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்கும் போது கேப்டன் பொறுப்பை மகிழ்ச்சியாக செய்து வருகின்றேன்.

இன்னும் சில மாதங்களில் டி20 உலக கோப்பை வர இருப்பதால் நாங்கள் ஒரு சிறந்த நல்ல அணியாக உருவாக வேண்டியது கட்டாயம். தற்போது இருக்கும் இந்திய வீரர்கள் சுதந்திரமாக விளையாடி வருகின்றனர். இந்த புதிய அணி பயமில்லாமல் ஆடி வருவதை நான் பார்த்து வருகிறேன். இதனால் தோல்வி அடைந்தாலும் கவலை இல்லை. நிச்சயமாக இது போல பாசிட்டிவான ஆட்டத்தை அதிரடியாக விளையாடும் பட்சத்தில் இன்னும் சிறப்பான விஷயங்கள் நமது அணிக்கின் நிச்சயம் வந்து சேரும் என கூறினார்.

Categories

Tech |