Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அங்கு ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து பேசியுள்ளார்.. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியில வந்து செய்தியாளர்களை சந்தித்தால் தான் எதற்காக சந்தித்தார் என்று தெரியும்.. நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக டெல்லி சென்று வந்தார்..

தமிழக கவர்னராக ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சந்திக்கிறார் ரஜினிகாந்த். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதயொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. அனைத்து நடிகர், நடிகைகள், பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் சமூகவலைகளில் தேசிய கொடிய வைத்துள்ளார்கள்..

இது குறித்து விழிப்புணர்வு செய்வதற்காகவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சுதந்திர தின விழா என்பது கொண்டாடப்படவில்லை. ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தும் கூட கடந்த ஆண்டு தள்ளி தான் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்  ராஜ் பவனில் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து பேசி வருகிறார். சில நாட்களாக பல்வேறு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்  பங்கேற்று வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |