Categories
தேசிய செய்திகள்

இந்த 4 வங்கியில் நீங்கள் லோன் வாங்கி இருக்கீங்களா?…. இனி அதிக EMI கட்டணும் …. உடனே பாருங்க…..!!!!

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முடிவடைந்தது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்.எனவே எப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி,பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதனால் அந்த வங்கிகளில் வீட்டுக் கடன், கார் கடன்,இருசக்கர வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற கடன் வாங்கியோர்களுக்கான இஎம்ஐ கட்டணம் உயரக்கூடும்.

ஐசிஐசிஐ வங்கி

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.15% அதிகரித்துள்ளது. தற்போது ஐசிஐசிஐ வங்கியின் EBLR வட்டி 9.10% ஆக உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி EBLR வட்டி விகிதத்தை 7.90 ஆக உயர்த்தியுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 7.95% ஆக உயர்த்தியுள்ளது.

கனரா வங்கி

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 8.30% ஆக உயர்த்தியுள்ளது.

Categories

Tech |