Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 11ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.காற்று திசை வேக மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகின்ற 11ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளையும் ஏனைய மாவட்டங்களில் மழை நீடிக்கும்.வருகின்ற 11ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல், மன்னார் வளைகுடா,மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் 11ஆம் தேதி வரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |