Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மேட்டூர் அணைக்கு குறைந்தது நீர்வரத்து”…. தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு….!!!!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தமிழக பொதுப்பணி துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் சென்ற 16ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அப்பொழுது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து வந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் சென்ற 2 நாட்களுக்கு முன்பாக அணைக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

இதனால் 16 கண் மதகு, அணையை ஒட்டியுள்ள நீர்மின் நிலையம் வழியாக ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக மேட்டூர், தங்கமாபுரிபட்டினம், தேவூர், காவேரிப்பட்டினம் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் அணையை ஒட்டி உள்ள புதிய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து எடப்பாடி மேட்டூர் சாலையில் 2 நாளாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாலத்தில் செல்ல மக்களுக்கு தடை நீடிக்கப்பட்டிருக்கின்றது. இதனிடையே பொதுப்பணி துறை முதன்மைச் செயலாளர் நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு செய்தார். மேலும் அணையின் முக்கிய இடங்களுக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.

Categories

Tech |