Categories
மாநில செய்திகள்

இனி வீட்டிலிருந்த படியே…. ஈஸியா தெரிஞ்சுக்கலாம்…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவுப் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்றுக்காலத்திற்கு பிறகு அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்கி வருகின்றது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டுள்ளனர். ஒரு வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் நேரம் செலவழித்து ரேஷன் கடைக்கு சென்று கடை திறந்து உள்ளதா? எந்தெந்த பொருட்கள் உள்ளது? என்பது குறித்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு நேரமில்லை.

அவர்களின் வசதிக்காக தற்போது புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீட்டிலிருந்தபடியே சம்பந்தப்பட்ட ரேஷன் கடை திறந்து உள்ளதா? நமக்கு தேவையான பொருட்கள் உள்ளதா? போன்றவற்றை மொபைல் மூலம் தெரிந்துகொள்ள புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. அது மட்டும் இல்லாமல் ரேஷன் கடையில் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் இதன் மூலமாக புகார் அளிக்க முடியும்.

அதன்படி,

PDS 101 – ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் விவரம் தெரிந்து கொள்ளலாம்.

PDS 102- ரேஷன் கடை திறந்திருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

PDS 107 -கட்டண தொகை குறித்த புகாருக்கு

மேற்கண்ட குறியீட்டை 9773904050 என்ற எண்ணுக்கு பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து குறுஞ்செய்தியாக(SMS) அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |