கனடாவில் மே 2021 ஆம் ஆண்டு முதல் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலமாக கனடா பிஆர் பதிவில் விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. கனடாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் காலியாக உள்ளது. கனடாவில் அதிக வேலை வாய்ப்பு விகிதம், குறைந்த வேலையின்மை விகிதத்துடன் இணைந்து புலம்பெயர்ந்தோருக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி தற்போது 2022 ஆம் ஆண்டில் 4 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்களை அழைக்க கனடா திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கு 2024 ஆம் ஆண்டு 4,50,000ஆக உயரும் எனவும் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. கனடா நாட்டில் வேலை செய்ய விரும்பும் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.