Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பத்தில் குளறுபடி…. இட ஒதுக்கீட்டை இழந்த மாணவர்கள் குற்றச்சாட்டு….!!!!!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள எட்டு மண்டலங்களில் அரசுக்கு சொந்தமான 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த கல்லூரிகளில் 2022 – 23 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆண்கள் மகளிர் மற்றும் பொது ஆகிய பிரிவுகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களுக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

இந்த வருடம் பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து அதில் தேர்ச்சி ஆகும் மாணவர்களுக்கு விண்ணப்பித்ததற்கு கூடுதல் அவகாசத்தை  தமிழக அரசு வழங்கியிருந்தது. இதனை அடுத்து மாணவ மாணவிகளும் உயர்கல்வியை பெற ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இந்த ஆன்லைன் விண்ணப்பத்தில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதர வகுப்பினர் என ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்களும் தங்களுக்கான பிரிவு மற்றும் ஜாதி பெயரை பிரத்யோகமாக குறிப்பிட்டு பதிவு செய்ய வசதிகளும் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டிருந்தது.

அதே நேரம் உயர்கல்வி பெறுவதற்கு இட ஒதுக்கீடு பெரும் வகையில் இணையதள விண்ணப்பத்தில் சாதியை குறிப்பிடும் இடத்தில் குறைபாடு இருந்ததாக சராசரி குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் என்பதை தேர்வு செய்தால் அடுத்த ஜாதி பெயரை பதிவு செய்யுங்கள் எனும் கட்டம் வருகின்றது. அதில் வடுகர் என்ற சாதியின் பெயரே  இடம்பெறவில்லை என்பதுதான் அந்த குற்றச்சாட்டாகும். தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ஜாதி பட்டியல் வடுகர் என்கிற ஜாதி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் இருக்கிறது. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வடுகர்  ஜாதி பிரிவினருக்கும் விண்ணப்ப படிவத்தில் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை சேர்ந்த மாணவ மாணவிகள் அதனை பூர்த்தி செய்ய முடியாமல் இதர பிற்படுத்தப்பட்டோர் ஓபிசி எனும் பிரிவில் விண்ணப்பிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டதாக மாணவ மாணவிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

Categories

Tech |