Categories
அரசியல்

காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நாமக்கல் கவிஞர்…. இது குறித்த சில தகவல்கள் இதோ….!!!!

காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். வட நாட்டில் தண்டி எனுமிடத்தில் உப்புக்காய்ச்ச காந்தியடிகள் அவர்கள் தமது தொண்டர்களோடு நடந்துசென்றார். அதே தினத்தில் தென்னாட்டில் நம் மதிப்புக்குரிய இராஜாஜியும் அவரது தொண்டர்களும் வேதாரண்யம் என்ற இடத்தில் இருந்து அணிவகுத்துச் சென்று உப்பெடுத்தார்கள். அவ்வாறு அவர்கள் உப்புச்சத்தியாக்கிரகம் செய்யச் சென்ற போது தேசபக்தியை வளர்க்கத் தகுந்தபடி நம் கவிஞர் பெருமான் பாடிக் கொடுத்த பாடல்களை மிகவும் உற்சாகத்துடன் பாடிச்சென்றனர். அந்த பாடலை அச்சிட்டு ஆயிரக்கணக்கில் தமிழகமெங்கும் காங்கிரசுத் தலைவர்கள் வழங்கினர்.

காந்தியடிகள் இந்தியவிடுதலைக்காகப் பாடுபட்டவர் ஆவார். மேலும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு அச்சாணியாக விளங்கியவர். அப்போது காந்தியின் தலைமையில் விடுதலை உணர்வுடைய நாட்டு மக்களும் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியின் வாழ்க்கை வரலாறு பல பேருக்கு முன் உதாரணமாக இருந்தது. அதனைக் கடைப்பிடித்தவர்களில் நாமக்கல் கவிஞரும் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது. ஒருமுறை காந்தி தம் சொற் பொழிவில் இந்தியாவிலுள்ள ஏழ்மை பற்றி விளக்கிப்பேசினார்.

அதாவது, ஏழைகளைக் காப்பாற்றுவதில் மன்னர்கள் தவறி விட்டனர் என சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக காங்கிரசு தலைவர்கள் மற்றும் மன்னர்கள் காந்தியை வெறுத்தனர். தீவிரவாத விடுதலைச் சிந்தனையாளர், தீவிரவாதம் பேசிக் கொண்டே கொடுங்கோலர்களின் செயல்களைக் கண்டிக்க அஞ்சினர். ஆனால் காந்தி மட்டும் தம் மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கூறினார். இதை பார்த்த நாமக்கல்கவிஞர், காந்தியாரிடமே சொல்லும் செயலும் ஒன்றாகப் பொருந்தி இருப்பதாகப் பாடினார். சத்தியநெறியில் அகிம்சை அடிப்படையில் போர் செய்வதை மட்டுமே காந்தி விரும்புவார். ஆங்கிலேயர்கள் தாமாகவே இந்தியாவைவிட்டு வெளியேற காந்தியின் அகிம்சைப் போரே காரணம் ஆகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் அந்நியர்கள் நெய்த ஆடையை வெறுத்துஒதுக்க வேண்டும் எனவும் இந்தியர்களால் நெய்யப்படும் கதர் ஆடையை ஆதரிக்க வேண்டும் எனவும் நாமக்கல் கவிஞர் பாடினார். ஏழைகள் வாழ அவர்கள் நெய்யும் கதர்த் துணிகளை வாங்கி, அவர்கள் வாழ்க்கைக்கு உதவிட வேண்டும் என்று அவர் கூறினார். விடுதலை வேட்கையோடு எழுச்சி மிகு பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர், விடுதலை இல்லாதநாடு புலிகளும், பேய்களும் மிகுந்த பெருங்காடு என்கிறார். எதிர்த்துப் போர் செய்யும் ஆங்கிலேயர்களுக்குப் பயப்படாமல் நம் விடுதலை எது என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும்.

நாமக்கல் கவிஞர் கடந்த 1914ல் திருச்சி காங்கிரசு கமிட்டிச் செயலராகப் பணிபுரிந்து இருக்கிறார். அதன்பின் 1921 -1930 வரை நாமக்கல் வட்டக் காங்கிரசுச் செயலாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார். காங்கிரசுக் கூட்டங்களில் கணீரென்ற குரலில் தேச பக்தி நிறைந்த சொற்பொழிவுகளைப் பொழிந்து இருக்கிறார். எழுத்தாளர்கள் கல்கி, அகிலன் போன்றோய் அவரது சொற்பொழிவால் மனமாற்றம் பெற்றவர்கள் ஆவர். நம் கவிஞர் 1932ல் நடந்த சத்தியாக்கிரகப் போரில் பங்கேற்று ஓராண்டுச் சிறைத்தண்டனை பெற்றவர் ஆவார். சிறையில் இருந்து திரும்பிய பிறகு காங்கிரஸ் ஊழியர்களை உபசரித்தும், முழு நேர அரசியலில் பங்கேற்றும் தன் பூர்வீகச்சொத்து முழுவதையும் இழந்தார்.

Categories

Tech |