குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பேட்டியளித்த அவர் குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகை தரப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும். டெல்லியில் சில ஆண்டுகளில் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம். இதுபோன்று குஜராத் இளைஞர்களுக்கும் வேலை வழங்குவோம். அது நடக்கும் வரை, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.