செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையோடு மாண்புமிகு முதல்வர் அவர்கள் துறைகள் வாரியாக திட்டங்களை செயல்படுத்துகிறார். மின்வாரியத்திலும் அதே மாதிரி 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்கள்.
10 வருடத்தில் செய்யக்கூடிய திட்டங்கள், ஐந்து ஆண்டுகளில் முடிக்க வேண்டிய திட்டங்கள் என்று கொடுத்திருக்கிறார்கள். அதில் ஐந்து ஆண்டுகளில் தான் 6220 மெகாவாட் சொந்த உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதுதான் உத்தரவு. அதற்கான பணிகளை நாங்கள் வடசென்னை ஆக இருக்கட்டும், எண்ணூராக இருக்கட்டும், உடன்குடியாக இருக்கட்டும் அதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
2006 – 11இல் தமிழ் டாக்டர் கலைஞர் அவருடைய பொற்கால ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் 10 ஆண்டுகளில், எந்த மின் திட்டங்களும் மின்வாரியங்களும் சொந்த உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் முடிக்கப்படவில்லை. 2018 – 19 முடிக்க வேண்டிய வட சென்னை… இந்த வருடம் டிசம்பருக்குள் முடிப்பதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் 18-19 இல் முடிக்கவேண்டிய எண்ணூர் 2024-ல் தான் முடியும். அந்த அளவிற்கு பணிகள் நடைபெறாமல் இருந்து, இப்போது விரைவு படுத்தப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் போரூர் ஜெனரேஷனை பொறுத்த வரைக்கும்…. எந்த இடங்கள் விடுபட்டுள்ளது. அதற்கான நிதிகளோடு சேர்த்து, பணிகள் விரைவில் முடிப்பதற்கான ஆய்வு முடிக்கப்பட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.