Categories
மாநில செய்திகள்

ஒரு உயிர் கூட போகாமல்….  எந்த பாதிப்பும்இல்லாமல்… வேலை செய்யுங்க… அதிரடி உத்தரவு போட்ட ஸ்டாலின் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பெய்து வருகின்ற மழையின் காரணமாக பொதுமக்களுக்கு மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கக்கூடிய மின்விநியோகத்தில் எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மின்சார வாரியத்திற்கு உத்தரவுகளை வழங்கி இருக்கின்றார்கள்.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாண்புமிகு முதலமைச்சர் உடைய வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டு, எந்த வித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோகம் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றில் அதிகமான நீர் செல்லக்கூடிய இந்த சூழலில், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல்,

குறிப்பாக எந்தவிதமான உயிரிழப்புகளும் வந்து விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சில மின் மாற்றிகளில் மட்டும் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அதாவது, இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. மின்விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு சரி செய்யக்கூடிய சூழல் ஒன்று, விநியோகம் செய்யக்கூடிய பகுதிகளில் மழை நீரால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அந்த காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மின் வினி யோகம் நிறுத்தி வைக்கக்கூடிய அந்த பணிகள் ஒன்று என விளக்கினார்.

Categories

Tech |