Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கருமுட்டை விற்பனை…. உடனே தொரங்க… போராட்டத்தில் மருத்துவர்கள்… அடுத்து தமிழ்நாடு முழுவதும் நடக்கும்..!!

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் அங்குள்ள தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் மையங்களுக்கு சீல்வைத்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகமானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவமனையின் ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் கடந்த சில தினங்களாக வழக்கம்போல் மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

அந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் சீல் வைக்க உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் நேற்று முன்தினம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனகூறி ஆஸ்பத்திரி அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையில் அதனை சீல்வைக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடுகிளை சார்பாக ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்யப்பட்டது.

அந்த வகையில் ஈரோட்டிலுள்ள 250 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 800 மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த அறிவிப்பு அந்தந்த மருத்துவமனைகளின் முன் வைக்கப்பட்டிருந்தது. வேலைநிறுத்தம் காரணமாக புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. எனினும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழக்கம்போல சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அவசரகால மற்றும் அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இந்தியமருத்துவ சங்கத்தின் சார்பாக ஈரோட்டில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடா்ந்து மருத்துவர்கள் கோரிக்கை மனுவை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடமும், அமைச்சர் சு.முத்துசாமியை நேரில் சந்தித்தும் வழங்கினர். முன்பாக இந்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் (தேர்வு) டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் கூறியதாவது, ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையை முழுவதுமாக மூட தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உத்தரவு பெற்று அனுப்பி இருக்கின்றனர். இதற்காக ஒட்டுமொத்த மருத்துவமனையையும் மூட சொல்வது மிகவும் அதிகபட்ச தண்டனையாக இருக்கிறது. ஆகவே இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது ஆகும். அடுத்தக்கட்டமாக தமிழகம் அளவில் ஆஸ்பத்திரிகள் வேலைநிறுத்தம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

Categories

Tech |