மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களும் மொத்தம் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். இதில் கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர் ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் அணி ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் அணிகளுக்கு இடையே மேட்ச் நடைபெற்றது. இந்த மேட்சில் திண்டுக்கல் அணியினர் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் அணிகள் மோதியதில் 20.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்யாசத்தில் 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.