இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள், ஏடிஎம் நெட்வொர்க்,ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் ஆகியவற்றிற்கு நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் இயங்கக்கூடிய கார்டுலேஷ் கேஸ் வித்ட்ராவல் வசதியை வழங்க அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில் அனைத்து வங்கிகளுக்கும் இந்த வசதி வந்தவுடன் வாடிக்கையாளர்கள் டெபிட் கால் அல்லது கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம் மையங்களில் இருந்து எளிதில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வசதி தற்போது ஒரு சில வகைகளுக்கு மட்டுமே உள்ளது. தற்போது கால்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி,எச்டிஎப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகியவை மட்டுமே வழங்கி வருகின்றன.நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம் களிலும் கார்டு லெஸ் பரிவர்த்தனை வசதியை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வசதி முற்றிலும் அமல்படுத்தப்படும் நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இல்லாமல் யுபிஐ பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
ATM கார்டு பயன்படுத்தாமல் பணத்தை எடுக்கும் வழிமுறை:
- முதலில் மொபைல் ஆப் மூலம் service என்பதை கிளிக் செய்து Cardless Cash withdrawal for Self எனும் ஆஃப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு எவ்வளவு தொகை என்பதை உள்ளிட்டு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் 4 இலக்க PIN நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும்.
- அனைத்து தகவல்களும் சரியாக இருக்குகிறதா என்பதை செக் செய்து விட்டு பின் ஓகே பட்டனை கிளிக் செய்யவும்.
- உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒரு Unique Code வரும்.
- அதனை அடுத்து அருகிலிருக்கும் உங்கள் வங்கி கணக்கை வைத்திருக்கும் ATM மெஷின் இருக்கும் இடத்திற்குச் செல்லவும்.
- ATM சென்றவுடன் உங்களுடைய registered மொபைல் நம்பரை பதிவு செய்யவும். அதன்பின் தற்காலிகமாக ஒரு கடவுச் செல்லை உருவாக்கவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்டிருக்கும் Unique Code நம்பரை அதில் உள்ளிடவும்.
- நீங்கள் முன்னதாக வங்கி மொபைல் ஆப் பதிவு செய்த தொகையை உள்ளிடவும்.
- பின்னர் அனைத்து தகவல்களும் சரியானது என உறுதி செய்தவுடன் ATM மெஷினிலிருந்து பணம் எடுக்க முடியும்.