Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ7,50,00,000 செலவு….. PLEASE உதவி பண்ணுங்க…. இல்லைனா FINE தான்….. நகராட்சி ஆணையர் பேட்டி….!!

குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் எங்களுக்கு அபராதம் விதிக்க அனுமதி உண்டு அதை செய்யக்கூடாது எனில், மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவ வேண்டும் என்று ஆம்பூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை  அடுத்த ரெட்டிதோப்பு, தார்வழி உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை வேலூர் மாவட்ட நகராட்சி ஆணையர் ஆலோசனைகளின் படி பல்வேறு மாறுதல்கள் செய்து திட்டத்தை ஆம்பூர் நகராட்சி செயல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆம்பூர் நகராட்சி ஆணையர் கூறியதாவது, சுமார் 7 ½ கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்பூர் நகரத்தை குப்பையில்லா நகரமாக மாற்றுவதை  நோக்கமாகக் கொண்டு இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை முறையாக செயல்படுத்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளைத் தரம் பிரித்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர்,

சிலர் நாங்கள் ஏன் தரம் பிரிக்க வேண்டும் அது உங்களுடைய வேலை என்று கூறுகிறார்கள். குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் அபராதம் விதிப்பதற்கு எங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் நாங்கள் அதை செய்து மக்களைத் துன்புறுத்த விரும்பவில்லை. ஆகவே மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குப்பைகளைத் தெருவில் கொட்டாமல் அதனை குப்பைத் தொட்டியில் போடுதல், ஆங்காங்கே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல்  உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |